Third party image reference
தற்போதைய காலகட்டத்தில் காலையில் எழுந்து கொள்வது என்பது மிகவும் கடினமான ஒன்றாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் கைபேசி மற்றும் தொலைக்காட்சியை நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருப்பதே ஆகும்.
மேலும் சில காரணங்களையும் மற்றும் அதிகாலையில் எழுந்து கொள்ள சில முக்கிய குறிப்புகளையும் இன்று நாம் காணலாம்.
இரவில் தூங்குவதற்கு முன்பு 2 மணி நேரத்துக்கு முன்பாக உணவு உண்ண வேண்டும் ஏனெனில் அப்போதுதான் உணவு நன்கு செரிமானம் ஆகி உடல் காலையில் எழுவதற்கு சோர்வாக இல்லாமல் இருக்கும்.
காலையில் மொபைலில் அலாரம் செட் செய்யும் போது மொபைலை அருகில் வைத்து தூங்காமல் சற்று தொலைவில் வைத்துக தூங்கும் போது நீங்கள் எழுந்து கொள்வதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. ஏனெனில் கைப்பேசி அருகில் இருக்கும் போது நம் உடல் தூக்க கலக்கத்தில் இருப்பதால் அதை அணைத்து விட்டு தூங்கி விடுவோம். சற்று தொலைவில் இருக்கும் போது எழுந்து நடப்பதால் தூக்கம் கலைந்து நீங்கள் சாதாரண நிலைக்கு வந்து தூக்கத்தை கலையலாம்.
இரவில் முடிந்த அளவு சீக்கிரமாக தூங்கினால் காலையில் அதிகாலையில் உங்களால் எழுந்துகொள்ள முடியும். இரவில் சீக்கிரம் தூக்கம் வரவில்லை என்றால் காலையில் சீக்கிரம் எழுவதன் மூலம் அடுத்த நாள் இரவு உங்களால் சீக்கிரம் தூங்க முடியும்.
ஒட்டுமொத்தமாக காலையில் நான்கு மணி ,மூன்று மணி என்று எழுந்து கொள்ள வேண்டும் என்று எண்ணம் வைக்காமல், பதினைந்து நிமிடம் அல்லது அரை மணி நேரம் நீங்கள் எப்பொழுதும் எழுவதற்கான நேரத்திலிருந்து குறைத்துக் கொண்டு எழுங்கள்..
ஆரம்பத்தில் சற்று கடினமாக இருந்தாலும் தினமும் இருபத்தொரு நாள் தொடர்ந்து நீங்கள் இவ்வாறு எழும் பொழுது அது உங்களுக்கு பழக்கமாக மாறி விடும்.
உங்க நண்பர்களுக்கும் பகிர்ந்து அவர்களின் முன்னேற்றத்துக்கு உதவலாமே.
இது போன்ற மேலும் முக்கிய தகவலுக்கு பாலோ பண்ணுங்க நன்றி.
No comments