Third party image reference
அதிகப்பணம் வைத்துக் கொண்டு வாழ்க்கையை தொலைத்தவர்கள் போன்று இருப்பவர்களும் உண்டு, இரண்டு வேளை பட்டினியில் உறங்க கூட இடம் இல்லாமல் இருந்தாலும் எப்பொழுதும் கள்ள சிரிப்புடன் இருப்பதை வைத்துக்கொண்டு அதையும் மற்றவர்களுக்கு பகிர்ந்து வாழ்பவர்களும் உண்டு.
Third party image reference
எனவே சந்தோசம் என்பது இல்லாததை நினைத்து கொண்டு வருத்தப்படுவது அல்ல இருப்பதை நினைத்து இவ்வுலகிற்கு நன்றி சொல்லுதல் ஆகும்.
சந்தோஷம் என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபடும். உண்மையில் உங்களுக்கு எது சந்தோஷம் என்று நீங்கள் கண்டறிய வேண்டும்.
உதாரணமாக உங்களுக்கு பாடகராக வேண்டும் என்று குறிக்கோள் இருந்தால் உங்களுடைய சந்தோசம் அதில் தான் இருக்கும். எனவே நீங்கள் அதில் சிறந்த வல்லுனர் ஆகும் போது அளவில்லாத சந்தோசம் உங்களுக்கு கிடைக்கும்.
Third party image reference
மேலும் உங்களுக்குள் நீங்கள் சந்தோஷமாக இருக்கவேண்டுமென்று எண்ணத்தை விதைக்கும் பொழுது நீங்கள் அதுவாகவே மாறுகிறீர்கள். அதை உங்களுக்கே தெரியாமல் செயல்படுத்துவீர்கள். எதை அடிக்கடி உங்கள் மனதுக்குள் உங்களைப் பற்றி சொல்லிக் கொள்கிறீர்களோ அதுவாகத்தான் நீங்கள் மாறுகிறீர்கள் என்று மறந்து விடாதீர்கள்
Third party image reference
மேலும் உண்மையான சந்தோசம் எதுவென்றால் சுயநலத்தையும் தாண்டி மற்றவர்களுக்கு உதவுவதில் உள்ளது என்று நீங்கள் அறியும் பொழுது உண்மையான சந்தோஷம் உங்களுக்குள் பிறக்கும்.
இது போன்ற மேலும் முக்கிய தகவல்களுக்கு பாலோவ் பண்ணுங்க.நன்றி.